அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியாவில் இன்று (28) கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த போராட்டம் வவுனியா தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புலிகளாக மீள உருவாக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மதத்தலைவர்களும், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் பரபரப்பாக கலந்து கையெழுத்து வழங்கினர்.

இந்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதே வேலை வவுனியா மாவட்டத்தில் நடைபெறுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் யார் தலைவருக்கான மத்திய குழு கூட்டம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு விமர்சனத்தை கொண்டு வந்ததாக மக்கள் கருதுகின்றனர்
வடக்கு கிழக்கு மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும் இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் புத்தியீவிகளின் பங்களிப்பு பலப்படும் போது மக்கள் பங்களிப்பு அதிகரிக்கும் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.