பிரித்தானியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் இலங்கை தூதரகங்கள் தூதுவர்கள் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, பிரித்தானியா, இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளில் இலங்கையின் நிரந்தர தூதுக்குழுக்கள் மற்றும் தூதரகங்களில் உயர்ஸ்தானிகர்கள் நாட்டிற்கு திரும்பப் பெறப்பட்ட நிலையில், புதிய நியமனங்கள் மிக மெதுவாக நடைபெறுவதாக தெரியவருகிறது.
இதன் காரணமாக, பதில் தூதர்கள் முக்கிய கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இலங்கைக்காக உலகளவில் சுமார் 60 தூதரகங்கள் செயல்படும் நிலையில், மூன்றில் ஒரு பகுதி தூதரகங்களில் உயர் அதிகாரிகள் இல்லாதது வெளிநாட்டு உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.