தமிழர் கலாச்சாரத்தின் வளமையை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய நிகழ்வான தமிழர் மரபுத்திங்கள் விழா 2025 இம்முறையும் லண்டனில் வடமேற்கு லண்டனில் உள்ள Byron Hall, Harrow பிரமாண்டமான மண்டபத்தில் 12-01-2025 அன்று நடைபெற்றது, தமிழர்களின் மரபு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புலம்பெயந்து தங்கள் வசிக்கின்ற நாடுகளில் கொண்டாடும் விதமாக சிறப்பிக்கப்பட்டது.

தமிழ் மரபுத் திங்கள் விழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழ் நாட்டின் மரபு மற்றும் பாரம்பரிய கலைகளின் அழகை வெளிப்படுத்தும் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இது தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறந்த மேடை வழங்கியது.
தமிழ் சமையல் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பண்டிகைக்கு ஏற்ப சிறப்பு உணவுகளும் பரிமாறப்பட்டது. தமிழர் கலாச்சாரத்தில் அத்தியாவசியமான பல வகையான உணவுகள், சக்கரை பொங்கல், சுடம் சுட தோசை, மற்றும் தேநீர் போன்றவை வழங்கப்பட்டன.
தமிழ் மரபுத் திங்கள் விழாவில் கலந்துகொண்டவர்கள், தமிழ் பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். பெண்கள் சேலைகள், புடவைகள் அணிந்து கலந்துகொண்டு, அதிகமான ஆண்கள் தமிழ் கலாசார ஆடைகளில் தோன்றினர்.
தமிழ் மக்களின் மரபுத்தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சியும், இளைய தலைமுறைகளுக்கான வழிநடத்தில் ஆக்கங்களும் இங்கே விற்பனைக்கும் கட்சிக்கும் வைக்கப்பட்டிருந்ததும்ம் வந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தது சென்றார்கள்.



