மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது மீதான விசாரணை மற்றும் அச்சுறுத்தலுக்கு பின்னர், சசி புண்ணியமூர்த்தி கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்பட்டார். பின்னர், அவர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அவரின் விபரங்களை குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 30 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கப்பட்டு, அவர்களது பிணையாளிகளுடன் தனித்தனியாக பதிவு செய்யுமாறு ஒரு வாரத்துக்குள் கால அளவு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக, கடந்த 08.09.2023 அன்று கொம்மாதுறையில் நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு 9ஆவது தவணையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.