இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு, நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க இன்று சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்தார். எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என்றுள்ள அவர், இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, நாடாளுமன்றில் இன்று விடுக்கப்பட்ட விசேட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள், வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பது என தமது அரசாங்கத்தின் நோக்கத்தையும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலைமை மீண்டும் நாட்டில் இடம்பெறாது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.