வெளிமாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர் இன்று தமது வர்த்தக நிலையங்களை மூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்தவர்களான வர்த்தக சங்கத்தினர், “மெகா சேல்ஸ்” என கூறி கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்று கூறினர்.

இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டு, அவற்றை உடனடியாக இப்பகுதியில் இருந்து மாற்ற வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபருக்கு மகஜர் ஒன்றை கையளித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.
இது தொடர்பாக, மாவட்ட அரச அதிபர் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.