மட்டக்களப்பு ஊத்துச்சேனை கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் 12.12.2024 இடம்பெற்றுள்ளது. இதன்போது, வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வடமுனை ஊத்துச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் இவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடவியல் பிரிவு காவல்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.