பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதற்கும் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டதற்கும் பொறுப்பேற்கவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரர் கொழும்பில் – ‘தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’ இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்
பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதற்கும், அவர்களின் சடலங்கள் அவமரியாதையாக கையாளப்பட்டதற்கும் பொறுப்பேற்கவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் கொழும்பில் இருப்பதாக ‘தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’ தெரிவித்துள்ளது. இவ்விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறித்த வீரரை கைதுசெய்யும் உத்தரவினை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.
‘தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்’ என்பது இஸ்ரேலின் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், காஸாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களை நினைவுகூரும் நோக்குடன், பெல்ஜியத்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரச சார்பற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் முறைப்பாட்டின்படி, குறித்த இராணுவ வீரர், பலஸ்தீன நபர்களை கொல்லும் போது அவர்களது சடலங்களை அவமரியாதையாக கையாள்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த அமைப்பு இஸ்ரேலிய இராணுவ வீரருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இன்டர்போல் உடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இதுகுறித்து முறைப்பாடுகளைச் செய்யப்பட்டுள்ளது.