இலங்கையின் பொது ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் இராணுவத்தை நியமிக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய அனைத்து பாதுகாப்புப் படைகளும் பொது ஒழுங்கை பேணும் பணியில் ஈடுபடுத்தப்படும் என ஜனாதிபதியின் விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பேணுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கு நிலைநாட்டப்படும். இராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்துப் படைகளும் ஈடுபடுத்தப்படும்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த உத்தரவு, நாட்டின் பொது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்வதற்கான முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் கடந்த வருடங்களில் குறிப்பாக இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்து ஈழத் தமிழ் மக்களுக்கு மேற்கொண்ட போர்குற்றங்களுக்கான எந்த ஒரு குற்றவியல் விசாரணைகளும் நடைபெறாமல் தொடர்ந்து ராணுவத்தினரை இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக அலுவல்களுக்கு பயன்படுத்துவது மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும் என்று சர்வதேசம் கருதுகின்றது.
