வடக்கு மாகாணத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மக்கள் பாவனைக்கு உட்படுத்தப்படும் செல்வபுரம் அள்ளிப்பலை இணைப்பு வீதியால் (1080 M) பொதுமக்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
DETA Power Pvt. Ltd & JOULE Power Pvt. Ltdயின் நிதியின் கீழ் Ashini Construction ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து 2019.10.15 தொடக்கம் 2020.03.12 வரையில் ரூபா 6, 255, 000.00 நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ் செல்வபுரம் அள்ளிப்பலை இணைப்பு வீதி சீரமைக்கப்பட்டது.
ஆனால் 04 வருடத்தில் வீதியின் நிலை கடும் மோசமான நிலையில் உள்ளது. குன்றும் குழியுமாக இருப்பது மனக்கவலையை கொடுப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் வீதியில் நீர் வழிந்து ஓடாத தன்மை காணப்படுவதால் குழிகளில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து, சுகாதார பிரச்சினை, பொதிகளை சீராக கொண்டு செல்ல முடியாமை போன்ற இன்னல்களுக்கு அன்றாடம் மக்கள் முகங்கொடுக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், அரச உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தை செலுத்தினால் பொதுமக்களின் இன்னல் தீர்க்கப்படும்.