யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் நேற்று (11) பிற்பகல் 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் இப்போராட்டம் இன்று புதன்கிழமை (12) மாலை 6 மணி வரை தொடரும் அறியக்கூடியதாக உள்ளது.


இந்த மக்கள் போராட்டத்திற்கு அதிகமான மக்கள், பொது அமைப்புகள் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், என பலர் தொடர்ந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் போராட்டத்தில் தங்களுடைய நிலம் தங்களுக்கு வேண்டும் என்ற குறிக்கோளை முன்னிட்டு இந்த போராட்டம் தையிட்டி விகாரைக்கு அண்மையில் நீதிமன்றத்தின் வரையறைக்கு உட்பட்டு நடந்து கொண்டிருக்கின்றது.
“எங்களிடம் எங்களுக்கு வேண்டும்” “தையிட்டி மக்கள் சொத்து” “அடக்காதே அடக்காதே ராணுவத்தால் அடக்காதே” “ஆக்கிரமிக்காதே ஆக்கிரமிக்காதே தமிழர் நிலங்களை அக்கிரமிக்காதே போன்ற பல கோசங்கள் எழுப்பிய வண்ணம் தங்களுடைய அதிர்வலைகளை எழுப்பி போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர்.
மக்களின் பூர்விக பரம்பரை நிலங்கள் தங்களுக்கு வேண்டும் என்னும் கோரிக்கைக்கு வலுசேர்ப்பதற்கு மக்கள் தொடர்ந்து வலுசேர்த்துகொன்டுள்ளனர்.

