அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பல வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக, சில வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம், போர் தீவுபற்று பிரதேச செயலக பிரிவின் பட்டிருப்பு போரதீவு பகுதியில் உள்ள பிரதான வீதியானது வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்ததை அடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைக் கையாளும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக, வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதிக்கு சமீபத்திய நவகிரி குளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மேலும், காபெட் வீதிகளை உடைத்து, அருகிலுள்ள வயல்களுக்கு படையெடுத்து தூக்கி வீசப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த வீதிகள் மிக விரைவில் புனரமைக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
பழுதடைந்த வீதிகளால், தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கும், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் போகின்றனர் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.