மெயிட்சுரோன் (Maidstone) மற்றும் கிரேவ்சென்ட் (Gravesend) சிவத்தம்பி தமிழ் பள்ளி மாணவர்கள் இணைந்து வழங்கிய ஒளிவிழா நேற்றைய தினம் மெயிட்சுரோனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வானது பள்ளி தலைமை ஆசிரியை முத்தமிழ் நடராஜா தலைமையில் அனைத்து ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு ஆசிரியர்களால் மேடையற்றப்பட்டது. பெற்றோர்கள் தாமாகவே மனமுவந்து பல வகையான சுவையான சிற்றுண்டிகளை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக இறுதியாக நத்தார் தாத்தா ஒளிவிழாவிற்கு வருகை தந்து மாணவர்களுடன் ஆடிப் பாடி மகிழ்ந்து அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி சென்றார். இறுதியாக தலைமை ஆசிரியையின் நன்றி உரையுடன் இந்த ஒளிவிழா மிகவும் இனிதே நிறைவுற்றது.





