யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழர் ஆராய்ச்சி மாநாடு படுகொலை நினைவு நாள் நடைபெற்றது.
வடமாகாண சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், இந்த நிகழ்வில் உரையாற்றியபோது, தமிழ் மக்கள் தங்கள் வரலாற்றை மறந்துவிடக் கூடாது என வலியுறுத்தினார். அவர், “தமிழர் நிலத்தில் தமிழர் ஆராய்ச்சி மாநாடு நடத்த அனுமதிக்காத அரசின் கொடுமையை நாம் மறக்க முடியாது. இதற்காகவே பல உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. இன்றும் தெற்கத்திய கட்சி ஆதிக்கம் தமிழர்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது. கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த தவறான முடிவை திருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே நாம் நம் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்” என்றார்.
திரு சிவஞானம் மேலும் கூறுகையில், “தமிழர்களின் கருத்து வேறுபாடுகளை தாண்டி, ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வேண்டும். தெற்கத்திய கட்சி தலைமைத்துவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, நம் சொந்த தலைவர்களை ஆதரிப்போம்” என்றார்.

இதே நேரம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு தலைவர்களுக்கான தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் திரு அரியநேத்திரன் அவர்கள் போட்டியிடப்பட்ட அதே நேரம் இதே தமிழரசு கட்சியின் துணைத் தலைவர் திரு சி வி கே சிவஞானம் அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு அதாவது தெற்கத்திய கட்சிக்கு முழுமையான ஆதரவை அவரும் அவருடைய கட்சியும் வழங்கியது என்பது மக்களின் விமர்சனத்தையும் அவநம்பிக்கையையும் தமிழரசு கட்சி மேல் அதிகரிக்கும் வண்ணமே உள்ளது.
திரு அரியநேத்திரன் அவர்கள் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர் என்பதுவும் இங்கே குறிப்பிடத்தக்கது.