யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான புதிய பயணிகள் முனையக் கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15) மதியம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் விமான நிலையத் தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவத் தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் கலந்துகொண்டனர்.
சர்வமத வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
