யாழ். நகரப் பகுதியில் துர்நாற்றம் எடுக்கும் கால்வாய்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், யாழ். நகரப் பகுதி கால்வாய்கள் துப்பரவு செய்யப்படாமல் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்
தேவையான வேலையைச் செய்வது இல்லை! தேவையில்லா வேலையைச் செய்யிறது! செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளது தேவையில்லா வேலைச் செய்யிறது!
5 மீற்றரை மட்டும் துப்பரவு செய்தார்கள் அத்தோடு சரி. “அவர்களுக்குச் சொல்லப்பட்டதாம் இடஞ்சல்களைத் தட்டிவிட்டால் சரி என்று” சுகாதாரப் பகுதியினரும் யாரும் வந்து பார்க்கல அவர்களுக்கும் எதுவும் தெரியாது. என அப்பகுதி மக்கள் இவ்விடயம் தொடர்பாக தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.