யாழ்ப்பாணம் பலாலி வீதியில், குறிப்பாக உரும்பிராய் சந்தி அருகே, பல மாதங்களாக வீதி விளக்குகள் ஒளிராமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீதி விளக்குகளை பராமரிக்கும் பொறுப்புள்ள அரச நிறுவனங்கள், குறிப்பாக வலி. கிழக்கு பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை ஆகியவை அவ்வாறு செய்யத் தவறி உள்ளன.
மக்கள் பலமுறை புகார் செய்த போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உரும்பிராய் சந்தியில் அதிகளவான வர்த்தக நிலையங்கள் இருப்பதால், இரவு நேரங்களில் சனநெரிசல் அதிகமாக இருக்கும். இதனால், வீதி விளக்குகள் இல்லாதது மேலும் ஆபத்தானது.
இரவு நேரங்களில் மக்கள் பாதுகாப்பு விழிப்பாகவும் செல்வதற்கு அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர் மற்றும் இது தொடர்பான பொறுப்பு கூறும் நபர்கள் கருத்தில் எடுக்க வேண்டுமென மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.