சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து நீதிக்கான பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இப்பேரணி, ஒகஸ்ட் 30ஆம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்பாக நடைபெற உள்ளது.
தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களின் நீதிக்கான பேரணியில், “வீட்டுக்கொருவர் போராட்டத்தில் பங்களிப்போம்” என்ற முழக்கத்துடன் பொதுமக்களை பேரணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்கள், காணாமல் போனவர்களின் உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், நீதியைப் பெற்றுத்தருவது வரை போராட்டம் தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
