யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், பெரியவிளானைச் சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (76) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மகன் காயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த வேளையில் இருவரும் வீதியோரமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது வீதியில் பயணித்த பேருந்து இருவரையும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால், மோஷஸ் பாக்கியநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துக்குப் பின், பேருந்து சாரதி பேருந்தை விபத்து நடந்த இடத்தில் கைவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.