வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இலங்கை தேர்தல்களில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்த தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் தனது உரையில், உலகெங்கும் வாழும் இலங்கையர்கள் தங்கள் நாட்டின் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற உரிமையை பெற வேண்டும் என்றும், இது மக்களின் அரசாங்கம் என்பதால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அவர் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு புலம்பெயர்ந்தோர் வழங்கிய நிதி உதவிகளை பாராட்டி, அவர்களது உழைப்பிற்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.