harrow west conservative association அமைப்பு நேற்று 14/01/2025 தை பொங்கல் கொண்டாட்டத்தை Harrow Arts Centre மண்டபத்தில் சிறப்பாக Harrow பகுதியில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வுக்கு ஹாரோ கவுன்சிலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களென பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேச்சுக்கள், இசை, நடனம் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மூலம் தமிழர் மரபுகளையும் தை பொங்கல் நிகழ்வினையும் சிறப்பிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலை 07:00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு இரவு 22:00 வரை நிகழ்ந்தது, மக்கள் இறுதிவரை மகிழ்ச்சியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

