(பிரித்தானிய தமிழர் பேரவையின் சமூக வலைத்தளப் பதிவு)
1948ம் ஆண்டு எனப்படும் சுதந்திரத்திலிருந்து இன்று வரை, இலங்கை அரசம் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் நில அபகரிப்புகள், தமிழர் பூர்வீக நில உரிமையை அழிக்கும் ஒரு அரச உத்தியோகபூர்வ ஆயுதமாகவே செயல்பட்டுள்ளது. என பிரித்தானிய தமிழர் பேரவையின் சமூக வலைத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது

வடக்கிலும் கிழக்கிலும் பரம்பரைதமிழ் மக்களின் நிலங்களில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டு, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாடு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.
தற்போது, வெலியோயா பிரதேச செயலாளர் பிரிவு (DS Division) – இது வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர் மாகாணங்களை இணைக்கும் ஒரு முக்கிய நிலத்தொடர்பாக இருந்தது – தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம்:
- தமிழர் நிலங்களின் பொதுமைத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது
- தமிழர் பூர்வீக அடையாளம் தொடர்ச்சியாக அழிக்கப்படுகிறது
- சிங்களர் குடியேற்றம் ஊக்குவிக்கப்படுகிறது
- இன அழிப்பு அரசியல் திட்டம் இன்னொரு கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது
இந்த நில அபகரிப்பு நடவடிக்கைகள் சாதாரண நிர்வாக நடவடிக்கைகளல்ல – இது தமிழர் தாயகத்தின் முழுமையான அழிவை நோக்கிய ராணுவ-அரசியல் வேலைத்திட்டம் என விளங்குகிறது.
ஈழத்தமிழர் விழித்திருங்கள்!
தமிழர் தாயக நிலத்தை காக்கும் போராட்டம், தமிழர் உரிமைகளை காக்கும் தாய்வாய்ப்பாகும்.