அனர்த்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உடனடி உதவி நிதியத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி, ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சேவினால் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் உருவான கடுமையான மனிதாபிமானச் சூழ்நிலையையடுத்து, இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு, வீடமைப்பு, குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமையுடன் உதவி ஒதுக்கப்படும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
மேலும், பேரழிவால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடவும், உதவி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் OCHA-வின் ஐந்து நிபுணர்கள் அடங்கிய குழு இலங்கையை வந்தடைந்துள்ளது.
