பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவரின் கைது . இவர், 2009ஆம் ஆண்டு இலங்கையை விட்டு பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்தவர், கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர்.
இந்த நபர், விடுதலைப்புலிகள் இயங்காத காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இது கொழும்பு மற்றும் வன்னி பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30ஆம் தேதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணத் தடை உத்தரவு அடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் விமான நிலைய பொலிஸாரும், கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.