தொடர்ந்து பெய்து வந்த கடும் மழை காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஈழத்தமிழ்மக்கள் பலத்த சிரமங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

அதிகமான வீடுகள் வெள்ளத்தால் நிரம்பியிருந்ததும் குடிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் அன்றாட வேலைகள் யாவும் முடக்கப்பட்ட்துடன் மக்கள் முகாங்களிலும் உறவினர் வீடுகளில் தங்கியிருந்தனர்.
இவர்களின் உடனடித்தேவைகளின் ஒரு பகுதியை பிரித்தானியாவில் இயங்கும் ஈழத்தமிழர் வர்த்தக சங்கம் வழக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் உலர்உணவுகள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரித்தானியாவில் இயங்கும் ஈழத்தமிழர் வர்த்தக சங்கம் “அம்பாறை மாவட்டத்திலும் அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்புடன்” இணைந்து வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உலர் உணவுகளும், அத்தியாவசிய பொருட்களும் வழங்கியுள்ளனர்.
“அவதியுறும் உறவுகளின் துயர் துடைக்க உரமாய் நிற்போம், உங்களோடு நாம்” என்னும் தொனிப்பொருளுடன் செயற்பட்டு வருகின்றனர்.


சீரற்ற காலநிலையில், பலத்த சிரமத்திலும் எதையும் பொருற்படுத்தாமல் தேவை அறிந்து உதவி செய்த அமைப்புகளையும் மற்றும் பகிர்ந்தளித்த உறவுகளும், அன்புடன் வழிநடத்திய விதமும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது என்று மக்கள் ஆனந்தமடைந்ததும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.