தற்போது சந்தையில் முட்டையின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு முட்டையின் விலை 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை என குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி அதிகரித்ததே என்கின்றனர்.
இருப்பினும், பண்டிகைக் காலங்கள் நெருங்கி வருவதால் முட்டையின் தேவை அதிகரிக்கக் கூடும் என்பதால், விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கணித்துள்ளனர்.
மறுபுறம், முட்டையின் விலை குறைந்திருந்தாலும், கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சி 900 முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோழி தீவனம், மருந்துகள் போன்றவற்றின் விலை உயர்வு மற்றும் தேவை அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.