வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய இந்தியா 300 மில்லியன் ரூபா கடன் உதவி அளிக்க உள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வாகன தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, இந்தியா வழங்கும் இந்த கடனுதவிக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் வாகன பற்றாக்குறை குறைந்து, பொதுமக்கள் பாதுகாப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.