மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு, மொராக்கோவின் அருகே கவிழ்ந்ததில், அதில் பயணித்த 25 மாலி நாட்டவர்களும் உட்பட குறைந்தது 69 பேர் உயிரிழந்ததாக மாலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த போது, படகில் 80 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து, ஸ்பெயினை அடைய முயற்சித்த பல ஏதிலிகள் கொண்ட படகுகளில் இதுவே நீரில் கவிழ்ந்த சம்பவமாகும்.
மாலியில் வேலைவாய்ப்பு இல்லாத நிலை மற்றும் விவசாய சமூகங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகிய காரணங்களால், அங்கு மக்கள் ஸ்பெயினுக்கு அடைக்கலம் தேடி பயணிக்கின்றனர். அத்துடன் சஹேல் பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிலவும் மோதல்களாலும் மக்கள் இடப்பெறுகின்றனர்.
எனினும், அவர்கள் பயணிக்கும் மொரிட்டானியா மற்றும் மொரோக்கோ வழியாக ஸ்பெயினை நோக்கி செல்லும் கடற்பாதை உலகின் மிக ஆபத்தான பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது.