யாழ்ப்பாணம், வேலணை – துறையூர் பகுதியில் பெருமளவான பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மருந்துகளை வாகனத்தில் எடுத்துச் செல்ல முயற்சிக்கும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வர் தற்போது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பூச்சி கொல்லி மருந்து போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முடித்துப் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், இதுபோன்ற செயல்களில் சட்ட விரோதமான பொருட்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவார் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.