கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகளை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் அகற்றி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி இ.கஜேந்திரா எச்சரித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயல்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக மலக்கழிவு வெளியேறிய வண்ணமிருக்கின்றன. எனினும், இதுவரை இதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் கடுமையான அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். புதன்கிழமை (8) கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் அவர்கள் நிலைமைகளை நேரில் அவதானித்து, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.