தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால், அனைத்து அரசியல் சபைகளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கான அபாயம் ஏற்படும் என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, ஒரு நல்ல அரசியல் முயற்சி மற்றும் இது ஒரு வெளிப்படை தன்மையை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இருந்தபோதிலும், என் பி பி (NPP) அரசு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களிடமிருந்து ஆதரவு பெறுவதற்கான பல்வேறு வழிகளைக் கையாளுகின்றது, அவர்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இது மிகவும் ஆபத்தான நிலையாகும் என்று எச்சரித்த அவர், இதனைத் தவிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சிவில் சமூகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.