இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர், அரசியல்வாதி மாவை சேனாதிராஜா, சிகிச்சை பலனின்றி இன்று (29.01.2025) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
1942 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 27ஆம் தேதி பிறந்த இவர், 82 ஆவது வயதில் உயிரிழந்தார்.
இவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.