இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை எதிர்த்து இலங்கை தமிழ் மக்கள், காணாமல் போன உறவுகளின் அமைப்பின் ஆதரவில் ஒரு கருப்பு நாள் போராட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் மற்றும் மக்களும், அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி கந்தசாமி கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் கிளிநொச்சி அரசு அதிபர் அலுவலகம் வரையும் நடைபெற்றது
இந்த ஊர்வலத்தில் பல பதாதைகள் மக்களின் பார்வைக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் கொண்டுவரப்பட்ட அதே நேரத்தில், எங்கே “எங்கே உறவுகள் அங்கே” “ஆக்கிரமிக்காதே ஆக்கிரமிக்காதே தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்காதே” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” “அடக்காதே அடக்காதே தமிழர் உரிமைகளை அடக்காதே” “சுதந்திரமற்ற நாட்டில் சுதந்திர தினம் எதற்கு போன்ற கோஷங்களை எழுப்பி மக்கள் மிகவும் எழுச்சியுடன் தங்களுடைய சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் வெளிப்படுத்தினர்.

