4.02.2025 இன்றைய 77 வது சிறிலங்காவின் சுதந்திர தினமானது புதிதாக ஆட்சியமைத்துள்ள அனுர அரசுக்கு வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் ஒரு சவாலான நாளாகவே கானப்படாலும் புதிய அரசுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிறிலங்காவின் தேசிய கொடியுடன் மிக பிரமாண்டமான ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்பதனையும் மறுக்க முடியாது .
இதற்கு எதிர்மாறக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பறக்க விடப்பட்டிருந்த சிறிலங்காவின் தேசிய கொடி யாழ் பல்கலைகழக மாணவர்கள் சிலரால் கீழ் இறக்கப்பட்டு கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டதயும் கவணிக்க கூடியதாக இருந்தது. அத்துடன் சிலரால் பாடசாலை மாணவர்கள் அரச அதிகாரிகள் சிலருடன் மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் சிறிலங்காவின் தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றது.
காந்திப் பூங்காவில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்விற்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டக்களப்பு தலைமை பொலிசாருக்கு இருந்த அக்கறை காரணத்தினால் தமக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி அப்பாவி கானாமலாக்கப்பட்டோர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இருவர் மற்றும் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்கள் அத்துடன் இரு சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆகிய ஏழு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் மூலம் நேற்றைய தினம் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆனாலும் இந் நிகழ்வுகள் தொடர்பில் ஏற்கனவே இரு வாரங்களுக்கு முன்பு ஊடக சந்திப்பு மூலம் கிழக்கு மாகான கானாமலாக்கப்பட்டோர் சங்க தலைவர்களால் இன்றைய நாளில் நடைபெறவுள்ள சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டத்தில் பலதரப்பட்டோரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிட தக்கதாகும். நிலையில் இன்றைய தினம் 4.2.2025 தாங்கள் அழைப்பு விடுத்திருந்ததன் பிரகாரம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடாத்துவதற்கு தீர்மானித்திருந்த போராட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு தலைமைக் காரியாலய தலைமை பொலிஸ் அதிகாரியினால் பெறப்பட்டிருந்த நீதி மன்ற தடையுத்தரவால் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த குறித்த இடத்தில் போராட்டத்தினை நடாத்த முடியாமல் போனது.இதில் இன்னுமொரு சுவார்சியமான விடயம் என்னவென்றால் காந்திப் பூங்காவில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் இந்த மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரிதான் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.


இந்த நாட்டில் இருக்கும் சட்டத்தை மதிக்கும் ஒரு சமூகமாக நீதிமன்ற தடையுத்தரவிற்கு மதிப்பளித்து மட்டக்களப்பு நியாய எல்லைக்கு வெளியில் உள்ள ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்களடி பகுதியில் இன்றைய சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிரான எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. பல நூற்றுக் கனக்கான கானாமலாக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். போராட்ட பேரணியானது செங்களடி பதுளை வீதியில் உள்ள பிள்ளையார் கோயிலடியில் ஆரம்பமாகி கொம்மாதுறை பிள்ளையார் கோயிலடியில் ஊடக சந்திப்புக்களுடன் நிறைவு பெற்றது. போராட்ட இடங்களில் எந்த பொலிசாரும் கானப்படவில்லை அதே நேரம் அதிகளவிலான புலனாய்வாளர்கள் பிரசன்னமாகி இருந்தனர் என்பது கவனிக்க தக்க விடயமாகும்.
மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன்.[சீலன்]