மட்டக்களப்பில் பல்வேறு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதைப் பற்றிய குற்றச்சாட்டுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கல்லடிவெட்டை, கானாந்தனை மற்றும் அதனையண்டிய பகுதிகள் போன்ற கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார துண்டிப்பு நிலைமை 2024 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டது. மழை வெள்ளத்தால், அதிக சக்தி கொண்ட மின்சார தூண்கள் சரிந்து நிலத்தில் வீழ்ந்ததால், மின்சார கம்பிகள் முறிந்து அந்த பகுதிக்கு மின்சாரம் கிடைக்காமல் போனது.
இதன் விளைவாக, பாடசாலை மாணவர்கள் தங்கள் கல்வி பயிற்சியில் தடுமாறி, யானை மற்றும் காட்டு விலங்குகளின் அட்டகாசங்கள் காரணமாக, கிராம மக்களுக்கு இரவில் மிகுந்த அசௌகரிய நிலை உருவாகியுள்ளது. மேலும், மின்சார கம்பிகள் மண் மேலே வீழ்ந்ததினால் மின்சார தாக்கம் ஏற்படும் என்ற பயமும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மின்சாரசபை மற்றும் பொதுத் தலைமை அதிகாரிகள் இதுவரை இந்த பிரச்சினையை சரிசெய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இதற்காக, சரிந்த மின்சார தூண்களை சரிசெய்து, அந்த பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் வழங்கும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.