வடக்கு–கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வு – திரியாயில் மக்கள் போராட்டம்
வடக்கு–கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் 100 நாள் செயன்முனைவின் 10வது நாள் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட திரியாய் கிராமத்தில் நடைபெற்றது.
போரால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட திரியாய் மக்கள், இன்றளவும் நில அபகரிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடிய மக்கள், ஒருங்கிணைந்த வடக்கு–கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை அரசிடம் வலியுறுத்தினர்.
நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
