பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தங்களின் தொடர்ச்சியான சர்வதேச வாதிடல் முயற்சியின் ஒரு பகுதியாக, மொரீஷியஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் துணை வெளிவிவகார அமைச்சருடன் சந்தித்ததாக, தமது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளது.

இச்சந்திப்பில், குறிப்பாக ஈழத்தமிழர்களை குறிவைத்து இலங்கையில் இடம்பெற்ற கொடூரச் செயல்களுக்கு பொறுப்புணர்வு, நீதி, மற்றும் மீண்டும் நடைபெறாமை என்பவற்றை உறுதி செய்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்த சந்திப்பு, தமிழர் இனப்படுகொலை பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்றவாளிகளை உலகளவில் பொறுப்புக்கூறச் செய்வதற்கான BTF-இன் உலகளாவிய முயற்சிகளில், மேலும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என அமைப்பு தெரிவித்துள்ளது.
