அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக, மாலைத்தீவு அரசு இலங்கைக்கு 25,000 டின் மீன் பெட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. 14 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட இந்த உணவு பொருட்கள், இன்று பிற்பகல் மாலைத்தீவு உயர்ஸ்தானிகரால் இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

நன்கொடை கையளிப்பு நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் செயல்பாட்டு பணிப்பாளர் பிரிகேடியர் ரொஷான் தர்மவிக்ரம, மேற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பிராந்தியத் தளபதி கொமடோர் அருண விஜேவர்தன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டயனா பெரேரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நன்கொடை மூலம், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவுப் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
