பேரிடரால் பாதிக்கப்பட்ட அல்மா பெரிய தோட்டம் (சாலிவெளி) பகுதிக்கு தாயகம் நோக்கிய நேசக்கரங்கள் (நோர்வே) அமைப்பின் ஏற்பாட்டில் 31 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் ஆதிரா கல்லூரியின் அதிபர் திரு. திலகேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் திரு. ராம்கி கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் செயல்முறையில் நேரடியாக பங்கேற்றனர்.
இந்த உதவி நிகழ்ச்சி, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கண்காணித்து, அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
