அமெரிக்காவின் முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஆகஸ்ட் 6, 2025 அன்று வெளியிட்ட நிறைவேற்றும் உத்தரவின் கீழ், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவின்மீது 25% அபராதவரி கட்டணத்தை (tariff) விதித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, ரஷ்யாவுடன் தொடரும் இந்திய வர்த்தகத்தை குறிவைக்கும் விதமாக அமைகிறது. இந்த 25% அபராதம் தவிர, மேலும் 25% அடிப்படை வரி கட்டணமும் அமுலுக்கு வருகிறது. இவை இரண்டும் 21 நாட்கள் கழித்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு இடமளிக்கப்படும் 21 நாள் அவகாசம், அமெரிக்காவுடன் புதிய எண்ணெய் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் வாய்ப்பாகவும், தன்னிச்சையான நடவடிக்கைகளை எடுக்கும்படியாகவும் வழங்கப்படுகிறது.
இதே நேரத்தில், சீனாவுக்கு 30% அடிப்படை வரி கட்டணம் விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ள போதும், ரஷ்யா எண்ணெய் வாங்கியதற்காக சீனாவுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கைகள், டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தக மற்றும் பன்னாட்டு கொள்கைகளின் கடுமையை காட்டுகின்றன. இந்திய-அமெரிக்க உறவுகள், மற்றும் ஆசியாவின் வர்த்தக நிலைமை ஆகியவற்றில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
