4 வயது சிறுவன் ஒருவர், கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் (05) உயிரிழந்துள்ளார்.
இவர் இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் என்ற 4 வயதுடைய சிறுவன் ஆவார். கடந்த 23ஆம் தேதி, சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார்.
இதன்போது கீழே இருந்த சவர்க்காரத்தின் மீது கால் வைத்ததால் சிறுவன் வழுக்கி கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைப் பெற்றும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணை மேற்கொண்டு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.
பெற்றோர்களின் அக்கறையின்மையே இப்படியான இழப்புகளுக்கு காரணம் என பரவலாக அப்போது மக்கள் பேசுகின்றனர்.