Friday, July 18

நேற்று 07/01/2025 பாராளுமன்றத்தில் நடந்த ஒரு முக்கியமான விவாதத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய திரு செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கான பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான பல தனது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டு இருந்தார். இதில் முக்கியமாக, இலங்கையின் வடக்கின் பல பகுதிகளில் பொது மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை அரசாங்கம் மீள திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.


மன்னார் மற்றும் அப்பாலுள்ள பிரதேசங்களில் பொருளாதார முன்னேற்றத்தை சாத்தியமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. எனினும், அவ்வப்போது “பயங்கரவாத தடை சட்டம்” போன்ற பிரச்சனைகள் முதலீட்டாளர்களை நம்பிக்கை தன்மையை மட்டுப்படுத்துகின்றது. இந்தச் சட்டத்தின் மூலம், சில சிக்கல்களை உருவாக்குகிறது,

வவுனியா பல்கலைக்கழகம் மன்னார் பகுதியில் தனது வளாகத்தை விரிவாக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால், புதிய நிதி ஒதுக்கீடுகளுக்கு அடிப்படை அமைக்கப்பட்டுள்ளது, இது கிழக்கு மற்றும் வடக்கு இலங்கை மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

இதுவரை முப்படைகளின் நிர்வாகத்தில் உள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலங்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. உதாரணமாக, வன்னி மற்றும் மன்னாரைச் சேர்ந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து மக்களுக்கு வழங்கும் முயற்சிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

வனவிலங்கு மற்றும் அதற்குரிய தடைகள், மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த 8 வருடங்களாக இந்த பிரச்சனைகள் தொடர்ந்தும் நிலவுகிறது. பிரதேச சபைகளிலும், மக்களின் ஆதங்கங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன.

இந்த வகையான அரசியல், சமூக, மற்றும் பொருளாதார பிரச்சனைகள், மக்கள் நலனுக்கான புதிய அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதற்கான அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. என்று அவரது பாராளுமன்ற உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version