களுத்துறையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். திருகோணமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகள் நாட்டில் எரிபொருள் விநியோகத்திற்கு தேவையில்லை என்றும், கொலன்னாவ மற்றும் முத்துராஜவெலா பகுதியில் எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகள் உள்நாட்டு எரிபொருள் விநியோக செயல்முறைகளுக்கு அவசியமானவை அல்ல என அவர் கூறினார்.
இந்த நிலையில், திருகோணமலையில் காணப்படும் சுமார் 61 எண்ணெய் தாங்கிகளை பயன்படுத்தி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இந்திய நிறுவனம் மற்றும் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.