Friday, July 18

தமிழரசு கட்சியின் (ITAK) புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டு ஒரு வருட காலம் ஆகியும், தமிழரசு கட்சி சீர்படுத்தப்படாத நிலையில், இன்று (28) வவுனியாவில் உள்ள இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியின் முன்னால், தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு செல்லும் உறுப்பினர்கள் கண்ணுக்கு புலப்படும் வகையில் பதாகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

இந்த பதாகையில் தமிழ் தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே, நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச்சபையை உடனடியாக கூட்டு, யாப்பின் படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவிற்கு இல்லை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2019-ஆம் ஆண்டில் பொதுச்சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக்குழுவை செயல் படுத்தவும், மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ் தேசியத்தை அளிக்கும் பணிகளை செய்யாதே என பதாதையில் எழுதப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு, மத்திய குழுக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் இந்த பதாகையை பார்வையிட்ட பின்னர், கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குள் சென்றனர்.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version