கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக பிரகடனப்படுத்தும் தேவையை வலியுறுத்தி, கவனயீர்ப்பும், மாநாடும் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில், இந்த போராட்டம் கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஆரம்பித்து, பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில், இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சைகை மொழி பேசுபவர்கள் கலந்து கொண்டனர்.