Friday, July 18

இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான சர்வதேச தினமான 12.12.2024 மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் “உள்வாங்கல் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக இயலாமையுடையவர்களின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்தல்” எனும் தொனிப்பொருளில் வவுனியா புதியபேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான  ஊர்வலம் வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தை அடைந்தது.
ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றது.

ஊர்வலத்தில் பல மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், சிறுவர்கள் பங்குபற்றினர். இதில் ஈடுபட்டவர்கள் நம்பிக்கை மனதில் உண்டு நம்பி கை கொடுங்கள், தொழில் உரிமை அனைவருக்கும் உண்டு, திறமைக்கு இயலாமைதடைகள் அல்ல 
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகம் மற்றும் ஓஹான் நிறுவனம் ஆகியவை இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version