Monday, January 26

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட 10,000 மெற்றிக் தொன் அரிசி கொண்ட கப்பல், தற்போது கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிசி இறக்குமதி, இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டை சமாளிக்க ஒரு முன்னெடுப்பாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் அரிசி தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ள நிலையில், இந்த இறக்குமதிக்கான வரையறைகளையும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய துறைமுகங்களிலிருந்து பல இறக்குமதியாளர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 20,000 மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் வியாழக்கிழமை (13) முன்னர் இலங்கையை வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை தீர்க்கும் முயற்சி ஆகும்.

Share.

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version