Wednesday, July 16

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத் தளபதிகள், கடற்படை தளபதி மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் புதிய தடைகளை அறிவித்துள்ளது.

இன்று, பிரிட்டன் இலங்கையின் உள்நாட்டு போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இந்த தடைகளை விதித்துள்ளது. இவர்கள் பாரதூரமான துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்று பிரிட்டன் கூறியுள்ளது.

இந்த தடைகள் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய மற்றும் கருணா அம்மான் ஆகியோருக்கு விதிக்கப்படுகின்றன.

பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இந்த தடைகள், இலங்கையின் உள்நாட்டு போரின்போது செய்யப்பட்டது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்பானவர்களை சுட்டிக்காட்டுவதற்கும், அந்த செயல்களை நிறுத்துவதற்குமான முயற்சியாகும்.

பிரிட்டன், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் சார்ந்த பணிகளில் இணைந்து செயல்படத் தயார் எனவும், தேசிய ஐக்கியம் குறித்து அதன் அர்ப்பணிப்பை வரவேற்கின்றதாக தெரிவித்துள்ளது.

இந்த தடைகள், போக்குவரத்து தடைகள், சொத்துக்களை முடக்குதல் உள்ளிட்ட பல வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கியது.

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version