திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதமகுரு சோ. இரவிச்சந்திர குருக்கல் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு. துரைசாமி தவசுலிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று ஒரு தொகை ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த முயற்சி, பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் மற்றும் வாழ்வுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடத்தப்பட்டதாகவும், சமூக அக்கறை மற்றும் ஊடகங்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையாகவும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
