மன்னாரில் கடற்கரை வீதியை புனரமைக்கும் பணியில் இடம்பெற்ற மரங்களை வேருடன் பிடுங்கி வீசுவது, கடற்கரை மணல் திட்டங்களில் மணல் அகழிப்பது, மற்றும் மக்கள் அதிருப்தி வெளிப்படுத்திய சம்பவங்கள் சமூகத்தினரிடையே பெரும் கவலைக்கிடமாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிராக நேற்றையதினம் மக்கள் அந்த பகுதியில் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர். கிராமத்தின் முக்கியஸ்தர்கள், மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் அருட்தந்தையர்களுக்கு இந்த விடையம் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் மற்றும் மற்ற அருட்தந்தையர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர், இதனைத் தொடர்ந்து குறித்த வேலைத்திட்டமானது உடனே இடை நிறுத்தப்பட்டது.
மன்னார் பிரதேசச்செயலாளர் எம். பிரதீப் சம்பவ இடத்துக்குச் சென்று நிலமையை மதிப்பீடு செய்துள்ளார். இதில், மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வீசப்பட்டுள்ளன, அதே சமயம் கடற்கரை மணல் திட்டுகளில் ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தி மணல் அகழப்பட்டுள்ளது. இதனைப் பற்றி கிராம மக்கள் கண்ணியமான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, மன்னார் பிரதேச செயலாளர் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து மேற்கொண்டு, இன்றைய (வெள்ளி) மன்னார் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கிய இடம்பிடித்து, மக்கள் எதிர்ப்புக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.